தமிழகத்தில் கொரானா தொற்றில் முதல் இடத்தில் இருப்பது தலைநகரமாம் சென்னைதான்.!
வெயில் டெம்பரேச்சர் மாதிரி இந்த கொரானாவும் ஸ்கோர் பண்ணிக்கொண்டு இருக்கிறது. விலைவாசி உயர்வு மாதிரித்தான்.!
இப்படிப்பட்ட சூழலில் பிரபல நடிகர் ராதாரவி இடம் பெயர்ந்திருக்கிறார்.
மூத்த நடிகர் ,சர்ச்சைப்பிரியர் ,டப்பிங் சங்கத் தலைவர் .குணச்சித்திர நடிகர் என பன்முகம் கொண்டவர். அரசியல்வாதியும் ஆவார்.
பேச்சை முடிக்கிறபோது “எனது திராவிட சொந்தங்களுக்கு வணக்கம்” என சொல்கிறவர் தற்போது பாரத் மாதா கீ ஜே என சொல்கிற நிலையில் இருக்கிறார். பிஜேபியின் நட்சத்திரப் பேச்சாளர். திமுக ,அதிமுக ,பாஜக என கட்சிகளை ஆய்வு செய்தவர்.
திடீரென கோத்தகிரி சென்று இருக்கிறார் குடும்பத்துடன்.!
அங்கே இருக்கிற சுகாதாரத்துறை அதிகாரிகள் ராதாரவியின் குடும்பத்தை சோதனை செய்து விட்டு வாசலில் ஒட்டக்கூடிய ஸ்டிக்கரையும் ஒட்டியிருக்கிறார்கள். முறையாக அனுமதி வாங்கி இடம் பெயர்ந்து வந்தாலும் பாரதிராஜாவுக்கு ஒரு நீதி இவருக்கு ஒரு நீதி என்று ஒட்டாமல் போக முடியாதல்லவா!
“தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார் ராதாரவி என்கிறது அந்த சுவரொட்டி. வீட்டுக்குள்ளேயே இருங்கள்.!விவகாரம் வராது.