சீமராஜா படத்தின் கேரக்டர் காமடியாக சொல்லப்பட்டாலும் அடிப்படையில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை.
சிங்கம்பட்டி சமஸ்தானம் இன்றளவும் இருக்கிறது .ஆங்கிலேயர் காலத்தில் தனித்தனி சமஸ்தானங்களாக தென்தமிழகத்தில் அதிக அளவில் ஜமீன்தார்கள் இருந்தார்கள்.
ராமநாதபுரம் .சிவகங்கை என குறிப்பிட்டு சொல்லலாம்.
ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் ஜமீன்தார்கள் என்கிற தகுதி இழந்து குறுகிய நிலங்கள் மட்டுமே அவர்களுக்கு கிடைத்தன.
நெல்லை மாவட்டத்தில் அம்பை தாலுகாவில் சிங்கம்பட்டி சமஸ்தானம் இருந்தது. இந்த ஜமீனின் ராஜாவை மையமாக வைத்துதான் சீம ராஜா படம் எடுக்கப்பட்டது.
இந்த ஜமீனின் அதிபராக வாழ்ந்த முருகதாஸ் தீர்த்தபதி ( 92 ) இறந்து போனார்.
இவரது புகைப்படத்தை வெளியிட்டு தனது அனுதாபத்தை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா
அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja