நம்ம ஆட்கள் ரொம்ப கில்லாடிங்க.!
மாஸ்டர் படம் இன்னும் சென்சாரே ஆகல .அதுக்குள்ளே படம் இவ்வளவு மணி நேரம் ஓடுது ,என்று நேரமெல்லாம் கணிச்சு நம்ம ஆளுங்க சென்சார் சர்டிபிகேட்டே கொடுத்திருக்காங்க.
புல்லரிக்க வக்கிருக்கீங்கப்பா !
விஜய் ,விஜய் சேதுபதிஆகியோர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் படம், ’மாஸ்டர்’
ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, கிட்டத்தட்ட வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. ,ஊரடங்கு முடிந்து அதன் பின்னர் திரையரங்குகள் திறந்த பிறகு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகே இந்த படம் வரும் என்கிறார்கள்.
தீபாவளிக்கு ரிலீசாகலாம் என்கிறார்கள் ..
ஆனால் சமூக வலைதளங்களில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தணிக்கை முடிந்து விட்டதாகவும்,இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் மற்றும் இரண்டு நிமிடங்கள் என்றும், இப்படத்துக்கு வழங்கப்பட்டகாக கூறப்படும் தணிக்கை சான்றிதழ் ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து விஜய் ரசிகர்கள்தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
மாஸ்டர் பட குழுவினர் என்ன சொல்கிறார்கள்?
’’மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை . சமூக வலைதளங்களில் பரவி வரும் சென்சார் சான்றிதழ் போலியானது. அதனை விஜய் ரசிகர்கள் பொருட்படுத்த வேண்டாம் ’மாஸ்டர்’ திரைப்படம் சென்சார் ஆனபின்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.