கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா இணைந்து நடித்திருந்த ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படம் குறும்படம் அண்மையில் வெளியாகி ஒரு அதிரடியை ஏற்படுத்தியிருந்தது.
6 மில்லியன் பார்வையாளர்கள் ,சிம்புவின் ஆயுட்கால விசுவாசிகள். அவரில்லையேல் வேறு எவர் எமக்கு என்கிற வெறியுடன் எஸ்.டி .ஆரை பின்பகியாற்றுகிறவர்கள். அவர்களது ஆதரவு இருந்த நிலையில் கணிசமான அளவு அந்த குறும்படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வாங்கியது..
.’விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தொடர்ச்சியாக உருவான அந்த குறும்படம் காதலின் தீவிரத்தை, அது ஏற்படுத்திய வலிகளைச் சொல்லவில்லை. என்பதாக பலர் கருதினார்கள்.
மனதுக்கு நெருக்கமான கணவன், 2 குழந்தைகள் என அமைதியாக வாழ்ந்து வரும் முன்னாள் காதலியை 10 வருடங்களுக்கு பின் திரும்பவும், வந்து ”ஐ லவ் யூ ‘நீ எனக்கு திரும்பவும் வேணும்’ வெட்கத்தை விட்டு உனக்கு யாருமே இல்லைன்னு நெனச்சு இதை கேக்கிறேன்” என அடம் பிடிப்பதும், அதற்கு அந்த காதலியும் “என் இரண்டு குழந்தைகளைப்போல் நீயும் எனக்கு மூன்றாவது குழந்தை” என்று கூறினாலும் , காதலனுக்கு இணக்கம் காட்டுவது மாதிரி இருக்கிறது என இது தவறு .பண்பாடு இல்லை ” என கண்டித்தனர்.
” காதல் கதையாக இருக்கும் என பார்த்தால், கள்ளக்காதல் கதையை சொல்லியிருக்கீங்களே” என சமூக வலைத்தளங்களில் கவுதம்மேனனை காய்ச்சி எடுத்திருந்தனர் .
இத்தகைய கண்டனங்களுக்கு கவுதம் மேனன் காரசாரமாகவே ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பதில் சொல்லியிருக்கிறார்.
“குறும்படம் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதே வெற்றி தான்.
குறும்படம் குறித்து பலரும் எனக்கு பாராட்டுகளையும்,சிலர் நெகடிவ்வாகவும் தங்களது கருத்துக்களை அனுப்பியுள்ளனர்.
ஆனா,கதைப்படி இந்த மாதிரி மைண்ட்செட்டில் உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பாங்க, இப்படித்தான் பேசுவாங்க .இக்குறும்படம் ஒரு மாரல் சைன்ஸ் கிளாஸோ, எல்லோரும் இப்படித்தான் இருக்கணும்னோ நான் சொல்லல.
ஆனா,இவங்க ரெண்டுபேர் இப்படித்தான் இருப்பாங்க.கார்த்திக் என்ற கேரக்டர் இப்படித்தான் இருப்பான்.அதை கடைசியில் சொல்லியிருப்பேன். இந்த மைண்ட்செட்ல இருக்கும் சிலபேர் இப்படித்தான் இருப்பாங்க அதை விட்டு அவங்க மாறமாட்டாங்க . அவங்கவங்க மைண்ட்ல என்ன நினைக்கிறார்களோ அது தான். இதை கள்ளக்காதல் என நினைத்தால் அது கள்ளக்காதல் தான்.
ஆனா,என்னைப்பொறுத்தவரை அது கள்ளக்காதல் கிடையாது.அந்த கார்த்திக் முதிர்ச்சியான கேரக்டர். அந்த கார்த்திக் கேரக்டரை எப்படி சரி பண்றது என்பது ஜெஸ்ஸிக்கு தெரியும் .கார்த்திக் ஜெஸ்ஸிக்கு 10 வருஷமா ஈ மெயில் ,மற்றும் அப் வாட்ஸ் மூலமா பலவிஷயங்களை பேசி பகிர்ந்து இருக்காங்க.அவங்களுக்குள் புரிதல் இருக்கு.
லாக் டவுனில், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவனோட மைண்ட்செட் அது தான் என்றவர்,குறும்படத்தின் இறுதியில் சிம்பு, கமல் & காதம்பரி என்று பெயரில் கதை எழுதுவதாக காட்டப்படும். அந்த கதை நான் ஏற்கனவே எழுதிய கதை தான். நடிகர் சூர்யாவை மனதில் வைத்து எழுதிய கதை. அதில் குறிப்பிட்ட பகுதியை அவருக்கு சொன்னேன். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. விரைவில்நானும் சூர்யாவும் இணைவோம் என்று நம்பிக்கையிருக்கிறது” என்று கூறியுள்ளார்.