
தெலுங்கு தேசத்தில் தற்போது ராணா டகுபதி -திரிஷாவைப் பற்றிய சேதிதான் விவாதப் பொருளாகி இருக்கிறது .
ராணாவும் திரிஷாவும் காதலித்தார்கள் என்கிற கிசு கிசு ஒரு காலத்தில் தமிழ்நாடு -தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு திரை உலகத்திலும் பரவலாகப் பேசப்பட்டது.
ராணாவே ஒரு முறை இப்படி சொல்லியிருந்தார் “எனக்கு சென்னையில் திரிஷா வீட்டுக்கு போகிற வழி மட்டும்தான் தெரியும்”என்பதாக!
மற்றொரு முறை “நாங்கள் டேட்டிங்கில் இருந்தோம். ஆனால் பலனில்லை ” என்பதையும் அவரே சொல்லியிருந்தார்.
ராணா -திரிஷா தொடர்பான செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுபோல ஒரு கட்டத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திரிஷாவுக்கு வைதீக முறைப்படி சென்னையில்
நிச்சயதார்த்தம் நடந்தது.அதற்கு முன்னர் தனி விமானத்தில் தாஜ்மகால் சென்று வந்தார்கள்.
ஆனால் அந்த திருமணம் நடக்கவில்லை.இன்றுவரை திரிஷா சிங்கிள்தான்.!
ராணாவுக்கு ஹைதராபாத்தில் உள்ள மிஹீகா பஜாஜ் என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டாரும் கலந்து பேசிய படங்களும் வெளியாகின.
மொத்த பட உலகும் ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்தது. நடிகைகள் உள்பட !
ஆனால் நெருங்கிப்பழகிய திரிஷா மட்டும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
த்ரிஷாவைப் பற்றி ராணாவும் எதுவும் சொல்லவில்லை. ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தங்கள் ‘என்றுதான் இருவரும் போய்க் கொண்டிருந்தார்கள் .
ஆனால் திடீரென ஒரு பதிவை போட்டு விட்டு சற்று நேரத்தில் அந்த பதிவை திரிஷா அழித்து விட்டதாக தற்போது பரபரப்பாக பேசுகிறார்கள்.
“முன்னாள் காதலியை நெருங்கிய நண்பர்களாக கருதுகிறவர்கள் சுயாதிக்க மனநோயாளிகள் “என்பதாக அந்தப் பதிவு இருந்து பிறகு நீக்கப்பட்டிருக்கிறது.
இது ராணாவை மறைமுகமாக குறிப்பிடுகிற பதிவாகவே பார்க்கப்படுகிறது. மிகவும் நேசிக்கப்படுகிற ,விரும்பப்படுகிற பொருள் கையை விட்டுப் போகிறபோது மனநிலை மிகவும் பாதிக்கப்படும் .அப்போது வெளிப்படுகிற சொற்கள் கடுமையாக இருக்கும். ஏமாற்றத்தின் வலி என்கிறார்கள் சிலர்.












