மறைந்த இயக்குனர் சி.ருத்ரைய்யாவின் இயக்கத்தில்,கமல்ஹாசன்,ரஜினிகாந்த்,ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பில் 1978.ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், ‘அவள் அப்படித்தான்’. இதன் கதை,திரைக்கதை வசனத்தை புதுமையாக வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா. ஆகிய மூவரம் இணைந்து எழுதியிருந்தனர்.
ஆவணப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட அருண் (கமலஹாசன்) எனும் இளைஞன், விளம்பர நிறுவனம் நடத்துகிற தனது நண்பன் (ரஜினிகாந்த்) அலுவலகத்தில் பணியாற்றும் மஞ்சு (ஸ்ரீபிரியா) ஆகிய மூவரைச் சுற்றியே இக்கதை பயணிக்கும்,இக்கதையின் மையப்புள்ளியே ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சுவின் கதாபாத்திரம் தான். குடும்ப பொறுப்பில்லாத தந்தை. பல ஆண்களோடு நட்பு பாராட்டும் தாய். அன்புக்காக ஏங்கும் அவர்களது மகள் மஞ்சு. அவளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்கள். காதலித்த ஒருவன் குடும்பச் சூழ்நிலையை காட்டி விலகுகிறான். அவள் மீது தீராக் காதல் என்றவன், அவளை அனுபவிக்க வழியில்லை என்றதும், தங்கை என அழைத்து, ஒதுங்கி விடுகிறான் இதனால் தன்னை உண்மையாக காதலிப்பவனை புரிந்து கொள்ளமாலேயே உண்மையான அன்பை தேடி அவள் போய்கொண்டே இருக்கிறாள் இதுதான் கதை.
இப்படம் வெளியாகி 42 ஆண்டுகளான நிலையில், தற்போது இப்படத்தை இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ரீமேக் செய்ய உள்ளதாகவும் . இதில் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசனும், ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் .கமல் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா அல்லது துல்கர் சல்மான் நடிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.தற்போது, ‘பிளான் பண்ணி பண்ணனும்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்












