
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டவர், காங்கிரஸ் பேரியக்கத்தில் மிதவாதிகள் பக்கமாக நிற்காமல் தீவிரவாதிகள் பக்கமாக நின்றவர், சுபாஷ் சந்திரபோஸின் பார்வர்ட் பிளாக் இயக்கம் தென்மாவட்டங்களில் கால் பதிப்பதற்கு காரணமாக இருந்தவர், நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் தமிழர்களும் பெண்களும் அதிகமாக இருந்தனர்.
இவரது வாழ்க்கையை படமாக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அருப்புக்கோட்டை பெருமாள் தேவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தேசியத்தலைவர் ‘என்கிற பெயரில் திரைப்படம் தயாரிக்கிறார்கள்.
பசும்பொன் தேவர் இருந்த காலத்திலேயே து.லா.சசிவர்ணத்தேவர் ,பி.கே.மூக்கையாத் தேவர் என இரு தலைவர்கள் இரு அணியாக இருந்தார்கள். பி.கே.எம்.அணியில் இருந்தவர்தான் பெருமாள் தேவர் .
உள்ளூர் கட்சிக்காரர்கள் மீது வழக்குகள் பாய்ந்த போது தேவரின் அபிமானத்துக்குரிய வேலாயுத நாயர் என்கிற வழக்கறிஞர் இருந்தார். இன்னும் இப்படி அதிக அளவில் பிரபலங்கள் இருந்தார்கள் .இவர்கள் வருவார்களா என்பது தெரியாது .
. ஜெ.எம்.பஷீர் என்பவர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார் என்கிறார்கள் ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறாராம் . இந்த படத்தை ஊமை விழிகள் அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றி படங்களை தந்தவர்.
முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் படக்குழுவினர்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது




