சிலரை என்னதான் சொன்னாலும் திருத்தவே முடியாது..மனதின் வஞ்சினம் வைத்துக்கொண்டு பழி தீர்த்துக் கொள்வார்கள்.இதை மனதில் வைத்துக்கொண்டு படியுங்கள் புரியும்.
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி .இவருக்கும் பிரபல மாடல் ஹசின் ஜஹானுக்கும் திருமணம் நடந்தது.கல்யாணம் நடந்தப்ப ஜஹானுக்கு இரண்டு பிள்ளைகள்.
எல்லாம் காதல் படுத்துகிற பாடு.!
ஷமி -ஜஹான் ஜோடிக்கும் குழந்தை பிறந்தது. கூடவே விவகாரமும் வளர்ந்தது.
மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஷமி மீது எழவே அவரால் கிரிக்கெட்டும் ஆட முடியவில்லை .வீட்டிலும் ஆட முடியவில்லை. பிரிவு.சட்டப்படி.!
சோசியல் மீடியாவில் பரபரப்பாக படங்களைப் போட்டு தூள் கிளப்பிவருகிற ஜஹான் தன்னுடைய முன்னாள் கணவர் ஷமியுடன் எடுத்துக் கொண்ட நிர்வாண வீடியோவை வெளியிட்டு சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை ஷமிக்கும் ‘டேக்’பண்ணியதுதான் வேடிக்கை.
“நீங்கள் ஒண்ணுமே இல்லாத ஆளாக இருந்தபோது நான் பரிசுத்தமானவளாக நேசிப்பவளாக தெரிந்திருக்கிறேன்.தற்போது நீங்கள் எல்லாவசதிகளுடன் இருப்பதால் நான் பரிசுத்தமில்லாதவளாக தெரிகிறேன்” என்று குத்திக்காட்டி பதிவு செய்திருக்கிறார் ஜஹான். அப்படிப் போடு!