
செவ்வணக்கம் தோழர்களே.!
இப்படிச் சொல்லிப்பாருங்கள் ,கம்பீரமாகத்தான் இருக்கிறது.
தமிழ்ச்சினிமாவில் சில ‘தோழர்கள்’ இருக்கிறார்கள் ,அவர்கள் முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருப்பது சிறப்பு.
இருந்தாலும் முன்னைப்போல சிவப்புச்சிந்தனையுள்ள படங்கள் தற்போது வருவதில்லை. வருகிற ஒன்றிரண்டு படங்களும் காதலில் அமிழ்ந்து வண்ணம் கரைந்து விடுகிறது.
ஆந்திராவில் எப்படி என்று பார்க்கலாம் .
விராடபர்வம் என்கிற பெயரில் நக்சலைட் சித்தாந்தம் பேசப்படுகிற படம் தயாராகி வருகிறது ராணா டகுபதி ,பிரியாமணி ,சாய் பல்லவி மூவரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் .அவர்களுக்கு மேக் அப் இல்லை என்பதாக சொல்லுகிறார்கள்.
பிரஞ்சுப் புரட்சியைப்போல இந்த விராடபர்வமும் இருக்கும் என்கிறார்கள். இந்த படத்தில் பிரியாமணியின் கேரக்டருக்கு பாரத் அக்கா என்கிற பெயராம்.
பிரஞ்சுப் புரட்சியை இன்னமும் உலகம் மறக்கவில்லை. அதன் வீரியம் குறையாமல் விராடபர்வம் இருக்குமா?












