சமத்துப் பொண்ணு சமந்தா. தமிழில் வெளிவந்த 96 தெலுங்கில் ‘ஜானு’வாக உருவெடுத்து பிளாப் ஆனா பிறகு பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை. திரிஷாவைப் போல வெற்றி பெறமுடியவில்லையே என்கிற கவலையாகவும் இருக்கலாம்.
யார் மனதில் என்ன இருக்கும் என்பது வெளியில் தெரியாதல்லவா?
இந்த நேரத்தில் லாக் டவுன் வேற.! சுத்தம்.!
முழுக்கதவடைப்பு .! மீடியாக்களிடம்தான் பேசவில்லை என்றால் ரசிகர்கள் என்ன பாவம் செய்தார்கள்.டிவிட்டர் பக்கமும் வருவதில்லை.
இன்னும் ஐந்து மாதம் அதாவது 2020 முழுக்க வெளியில் தலை காட்டாமல் வீட்டுக்குள்ளேயே இருக்கப்போகிறார் என்கிறார்கள் .கணவனுடன் மட்டும் தனித்து.! வாழ்க வளமுடன் !
நல்ல சேதி மாதிரிதான் தெரிகிறது.முயற்சி வெற்றி பெறுக.!
தமிழில் நயனுடன் நடிப்பதாக ஒரு படம் இருக்கிறது. அது என்ன ஆகும் என்பது தெரியவில்லை.