ராகுல் பிரீத்தி சிங் .பாலிவுட் பாப்பா.பலே கில்லாடி. துணிந்து கருத்து சொல்லுவார்.
தன்னை விட உடல் அழகு வேறு எந்த நடிகைக்கும் இல்லை என்கிற நம்பிக்கையில் வளைவு சுழிவுகளை கேமராவே பொறாமைப்படும் அளவுக்கு போஸ்களை கொடுப்பார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் சைவத்துக்கு மாறினார் ராகுல் பிரீத் .
இவருக்கு இன்ஸ்ட்ராகிராமில் 14 மில்லியன் ரசிகர்கள் .அத்தனை பெரும் போட்டோவை ரசித்து மயக்கம் கொள்கிறவர்கள்.
ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 -வில் கமல்ஹாசனுடன் நடித்துவருகிற இவர் மார்ச் மாதத்தில்தான் கடைசி போட்டோ ஷூட்டை நடத்தினாராம்.அதனால் பொறுக்க முடியாமல் பொங்கி இருக்கிறார்.
“மார்ச் மாதம்தான் போட்டோ ஷூட் நடத்தினேன். என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை .மறுபடியும் வேலையை ஆரம்பிக்கணும்” என்று பதிவு செய்திருக்கிறார்.
படப்பிடிப்புக்கு போகவேண்டும் என்று சொல்லியிருந்தால் அவரது அக்கறையை பாராட்டி இருக்கலாம். போட்டோ பிடிக்கணும்னு இந்த பொண்ணு சொல்லுதே!