சீயான் 60.
ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான்.
சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புக் குரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது. ( அச்சுறுத்தல் எப்ப முடியும்னு கொரானுவுக்கே தெரியாதே!)
அந்தந்த கதைகளின் கேரக்டராகவே மாறுகிற சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார்.
ஆம்.. முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தை இயக்குகிறவர் கார்த்திக் சுப்புராஜ் .
எதிர்பார்ப்பு மேலும் எகிறுகிறதல்லவா!.
‘பீட்சா’ தொடங்கி தற்போது முடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வரை ஒவ்வொரு படமுமே வித்தியாசமான கதைகளங்கள் தான்.
அப்பா மகனை மோத விடுகிறாரா,அல்லது கதையிலும் அப்பா பிள்ளையாகவே நடிக்க வைத்து அதில் வித்தியாசம் காட்டுவாரா என்பது கார்த்திக் சுப்பராஜ்க் சொன்னால்தான் தெரியும்.
அந்த வகையில் ‘சீயான் 60’ படமும் வித்தியாசமான கதைகளமாகவும், ரசிகர்களுக்கு விருந்தாகவும் இருக்கும் என நம்பலாம்.
பாஸ்ட் இசைக்கு அனிருத் என்றாகிவிட்டது. இவரது இசை என்பதால் கதை நகர் சார்ந்ததாக இருக்கலாம்
இந்தப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார் . இவருடைய வெளியீட்டில்தான் ‘மாஸ்டர்’ வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து ‘கோப்ரா’, ‘துக்ளக் தர்பார்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘சீயான் 60’ படத்தை தயாரிக்கவுள்ளார். ஒரு நிறுவனத்தின் படங்களின் வரிசையைப் பார்த்தாலே, அந்நிறுவனத்தின் வளர்ச்சியைக் கூறிவிடலாம். அப்படி தரமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வரும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான வளர்ந்து வருகிறது.
‘சீயான்60’ 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.