
சுஷாந்த் சிங் சாவு தற்கொலை இல்லை. கொலை!
இதற்கு காரணம் சல்மான்கானின் குடும்பம் என்கிற குற்றச்சாட்டு வலுவடைந்து கொண்டிருக்கிறது.
முஜாபர்பூர் முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பிரபல வக்கீல் சுதிர் குமார் ஒஷா இது தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.
சல்மான் கான் ,கரண்ஜோகர்,சஜித் நாடியாவாலா பூஷன் குமார் ,ஆதித்ய சோப்ரா ,சஞ்சய் லீலா பான்சாலி உள்ளிட்ட பலர் அவரது குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார்கள் .
“பீகாரின் நட்ஷத்திரமான சுஷாந்த் சிங்கை வளரவிடாமல் தடுத்திருக்கிறார்கள் .பட வாய்ப்புகளை தடுத்தும் ,நடித்து வெளியிடுவதற்கு தயாராக இருக்கிற படங்களை ரிலீஸ் பண்ணவிடாமலும் முட்டுக்கட்டைப்போட்டு தடையாக இருந்திருக்கிறார்கள் .மனஉளைச்சல் ,நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை ,கொலை செய்யப்பட்டிருக்கிறார்”என்பதாக வக்கீல் சொல்லியிருக்கிறார்.
வாரிசு நடிகைகளான சாரா அலிகான் ,ஆலியாபட்,சோனம் கபூர் சோனாக்ஷி சின்கா மற்றும் சிலர் மீதும் ஒரு இயக்குநர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த பிரச்னையில் சல்மான்கான் உள்ளிட்ட சிலருக்கு எதிராக பாட்னாவில் ஆர்ப்பாட்டமும் நடந்திருக்கிறது.
கொரானா காலத்தில் சுஷாந்த் தொடர்பான வழக்கும் சேர்ந்தே பரபரப்பு கிளப்பி வருகிறது.












