சொல்லிக் கொண்டிருப்பதைவிட செயலில் காட்டுவதே உண்மையான வீரம் என்பார்கள். ஆனால் எண்ணித் துணிக கருமம்..என்பது பொதுவான கருத்து.!
இசை அமைப்பாளர் ஜிப்ரான் எண்ணித்துணிந்து செயல் படுத்திவிட்டார்.
இந்திய -லடாக் எல்லையில் சீனப்படை அத்து மீறி அராஜகமான நடந்திருக்கிறது
. இதில் தமிழக வீரர் பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீன ராணுவம் அடிக்கடி தனது வாலை ஆட்டிக்கொண்டுதான் இருக்கும். இதற்கு பதிலடி கொடுக்கிற வகையில் மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டுமல்லவா?
சீன செயலிகள் மற்றும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்தது. , சீனாவின் ஐம்பதுக்கும் மேற்பட்ட செயலிகள் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது., அவற்றை உபயோகிக்க வேண்டாம் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
சீன செயலிகளை நீக்கும் புதிய செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. . இந்த ஆப்பை பயன்படுத்தி பலர் சீன செயலியை நீக்கி வந்தனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான், தான் உபயோகித்து வந்த சீன செயலிகளான ஹலோ, டிக் டாக் ஆகியவற்றில் இருந்து தனது கணக்கை நீக்கியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இந்த இரண்டு செயலிகளிலும் உள்ள என்னுடைய கணக்கை நீக்கிவிட்டேன். நீங்கள்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் என்ன செய்யப்போகிறோம்?