இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் .
கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின., அதற்கான காரணம் குறித்து மும்பை பாந்த்ரா போலீசார், சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, மற்றும் சுஷாந்த்தின் நண்பர்கள், அவர் சிகிச்சை பெற்ற டாக்டர் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கப் போகிறார்களாம். இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் உருவாக்க உள்ளனர். இன்னும் பெயரிடப் படாத இந்தப் படத்தை நிகில் ஆனந்த் என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தை பொதுமக்களிடம் பணம் வாங்கி கிரவுட் பண்ட் முறையில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார் .
வரும் 2022 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படம் குறித்து,இயக்குனர் நிகில் ஆனந்த் பேசுகையில்,”சுஷாந்த் இப்போது நம்முடன் இல்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் உந்து சக்தியாக இருந்தவர்.சினிமாவில் அவரை என்றும் நிலைத்து நிற்க வைப்பது என் கனவு. இந்த படம் சினிமாவில் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் மாற்றத்தைக் கொண்டு வரும் விதமாகவும் இருக்கும் என நம்புகிறேன் என்கிறார்.