கல்யாண ஆசை வந்து விட்டால் கப்பென்று கழுத்தை நீட்டி குப்பென்று பறந்து விடவேண்டும்.
தமிழ் ,தெலுங்கு இரண்டிலும் 15 வருஷம் கொடி கட்டி பறந்தாச்சு. ரெண்டு இட த்திலும் நல்ல பெயர். எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்தாகி விட்டது. தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பதற்கு வாய்ப்பு.!
அடடா பெயரை சொல்லாமலேயே இழுத்துக் கொண்டு போகிறோமோ! காஜல் அகர்வால்.!
இவருக்குத்தான் கல்யாண ஆசை வந்திருக்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,கமலுடன் இந்தியன் 2 ,க்யூன் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் தமிழ் ஆகிய படங்களை முடித்துக் கொண்டு அடுத்த வருடம் கொரானா இல்லாத காலமாகப் பார்த்து தாலியைக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.! வீட்டாருக்கு சம்மதம் சொல்லிவிட்டாராம் காஜல்.!
மாப்பிள்ளை தனவணிகர் .பெரிய தொழிலதிபர் .அவுரங்கபாத் பணக்காரர்.
“கடவுள் பக்தி உள்ளவராக இருக்க வேண்டும் என்னை கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற வேண்டும் .இப்படிப்படடவரைத்தான் தேடுகிறேன் “என்பதாக முன்னர் காஜல் சொல்லியிருந்தார். அவர் வாக்கு பலித்தால் சரி.!