கேரளாவைச் சேர்ந்த ஷாம்னா காசிம் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் பூர்ணா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், சவரக்கத்தி, காப்பான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் , தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில்,பூர்ணாவின் தாயார் ரவுலா இன்று தனது மகள் பூர்ணாவை 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டியதாக கேரளாவில் உள்ள மராடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், ரபீக் என்பவர் நடிகை பூர்ணாவை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அடிக்கடி டார்ச்சர் செய்ததாகவும்,
தொடர்ந்து,மராடுவில் உள்ள பூர்ணாவின் வீட்டுக்கு கடந்த 3ந்தேதி, கும்பலாகசென்ற ரபீக், பூர்ணாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்ததாகவும்,
மேலும்,நடிகை பூர்ணாவை ரபீக் மிரட்டி, தனக்கு ரூ.1 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையெனில் பூர்ணாவின் தொழிலையே அழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறியுள்ளதாக தெரிகிறது.
புகாரின்பேரில் போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட ரபீக், சரத், அஷ்ரப் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து,அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.