எத்தனை நடிகைகள் தங்களின் முதல் பட நாயகன்களை நினைவில் வைத்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.! ஆனால் சமந்தா மறக்கவில்லை. அத்துடன் அந்த நாயகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
.தற்போது சமந்தா தமிழில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் தொடங்க உள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா, தனது முதல் கதாநாயகனான நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்தில், ”எனது வெளிச்சமாக இருந்ததற்கு நன்றி. உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நீ கொடுக்கும் பாசிட்டிவிட்டி, எல்லோரிடத்திலும் கிடைக்காது. உன்னை எப்போதுமே என் இனிய நண்பர் என பெருமையாக கூறுவேன்” என பதிவிட்டுள்ளார்.
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த ராகுல் ரவீந்திரன்.
தெலுங்கில் பிசி. இவர் தமிழில் வின்மீண்கள், சூரியநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமந்தாவின் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் ரவீந்திரன், ”இன்று காலை எழுந்தவுடன், உனது மிஸ்டு காலையும், இந்த ட்வீட்டையும் தான் பார்க்கிறேன். என்னை ரொம்பவே எமோஷனல் ஆக்குகிறாய்” என பதிவிட்டுள்ளார்.