இது காதலில் எந்த வகை ?
தெரியவில்லை.!
- “பெண்ணோடு சேர்ந்து விட்டால்
- பேசாத பேச்சு வரும்:
- முன்னாலே ஆண்கள் வந்தால்
- முழு மனதில் நாணம் வரும்”என்கிறார் கண்ணதாசன்.
இதுதான்யா காதல் !இதோ நாங்கள் உதாரணமாக இருக்கிறோம் என்கிறார்கள் சினிமாவைச் சேர்ந்த இரு ஜோடிகள்.
ஆனால் அவர்களை பொருந்தாத ஜோடிகள் என்கிறார்கள் சிலர்.!
மிலிந் சோமன் .வயது 56. அங்கிதா வயது 30. முதுமையும் இளமையும் எப்படி இணைந்து வாழ முடியும் ,என்று கேட்டார்கள் .ஆனால் இன்றளவும் அவர்கள் மகிழ்ச்சியுடன்தான் வாழ்கிறார்கள்.”விழி ஒரு பக்கம் பந்தாடுதே ! இடை ஒரு பக்கம் தள்ளாடுதே! நடையோடு வாழைத் தண்டாடுதே ! நடனம் இதில்தான் உண்டானதே! “என அவர்கள் காதலும் காமமுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது கேரளத்தில் ஒரு ஜோடி.!
செம்பன் வினோத் ஜோஷ்.சினிமா நடிகர். வயது 43. இவருடன் வாழ்வதற்கு மண விழா ஒப்பந்தம் செய்து கொண்டவர் மரியம். வயது 25. புனேவில் கல்வி முடித்து விட்டு கொச்சியில் பணியில் இருந்தவர். இவருக்கும் செம்பனுக்கும் காதல். இது எப்படி?
அதுவும் செம்பனுக்கு இது இரண்டாவது திருமணம்.!
இவர்களின் திருமணத்தை கேரளத்தில் நக்கல் நையாண்டி செய்கிறார்கள்.
செம்பனை விட 17 வயது இளையவரான மரியத்துக்கு முதியவரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானோ என ஏகடியம் பேசுகிறார்கள்.
“ஒருநாள் வானிலே வெண்ணிலா வந்தது .உன்னைத்தான் எண்ணினேன் ,என்னவோ பேசினேன்”என்கிறார் கணவனைப் பற்றி பிரியமுடன் மரியம் .
“எங்களுடைய அன்பு அளப்பரியது.நான் சரியானவரைத்தான் கணவனாக தேர்வு செய்திருக்கிறேன். வாழ்க்கை இன்பமும் ஆனந்தமுமாக இருக்கிறது “என்கிறார் மரியம்.
நடிகர் செம்பியன் சற்று கோபத்துடன் பார்க்கிறார் நையாண்டிப் புலவர்களை!
“25 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் அவருடைய வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்கக் கூடாது என்று சட்டம் எதுவும் இருக்கிறதா? நாங்க இருவரும் விரும்பித்தான் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறோம். எங்க வாழ்க்கையில் ஏன் உங்க மூக்கினை நுழைக்கிறீர்கள்?”என்று கேட்கிறார் .
இதுவும் உண்மைதானே!
- உலகமெங்கும் ஒரே மொழி .
- உள்ளம் பேசும் காதல் மொழி.
- ஓசையின்றி பேசும் மொழி
- உருவம் இல்லா தேவன் மொழி.!