
மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தவர் வனிதா.நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் இரண்டாவது மகள். வனிதாவும் டி.வி. நடிகர் ஆகாஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர்.
தற்போது வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில்,வனிதா விஜயகுமார் தான் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்வதாக சமீபத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தார்.
அதன்படி,வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை இன்று மாலை கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.வீட்டில் மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நண்பர்கள் மற்றும் பீட்டர் பாலின் உறவினர்கள் கலந்து கொண்டனர் .முன்னதாக மணப்பெண் தோழியாக அவரது மகளே மணப்பெண் கோலத்தில் வனிதாவை அழைத்து வந்து மணமகன் பீட்டர் கையில் சேர்த்தார்.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் முத்தமிட்டு கொண்டனர்.பின்னர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டும், ‘ஷாம்பெயினை’ பீய்ச்சியடித்தும் திருமணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.நடிகை அம்பிகா இந்த திருமணத்தில் பங்கேற்றார்.

































