“வனிதா விஜயகுமாரின் மறுமணத்தில் மணப்பெண் தோழியாக மாறியிருந்தார் மகள் ஜோவிகா .
அம்மாவின் காதல் திருமணம் குறித்து அவரது சமூக வலைதளத்தில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?
” நான் உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன், உங்களால் பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி, சாகசம், உற்சாகம் மற்றும் உண்மையுள்ள எங்கள் சிறிய குழுவில் பப்பாவை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பிரமிக்கிறேன். இறுதியாக இதனை முழுமையானதாக உணர்கிறேன்,
ஒரு நாள் உங்களுக்கு கிடைத்திருக்கும் நண்பர்களை போன்று பெறுவேன் என்று நான் நம்புகிறேன்.
“உங்கள் குடும்பத்தைப் பற்றி என்னிடம் சொல்லுங்கள்” என்று கேட்டால் நான் சொல்லும் பெயர்கள் உங்களுடையதாக இருக்கும் .
பலர் பல விஷயங்களைச் சொல்லலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள்! இது நம் வாழ்க்கை, அதை நம் வழியில் வாழப்போகிறோம்!! காதல் என்பது தொற்று.. நம் உலகம் அதனால் நிரம்பியிருக்கிறது! இதனால் தொற்று ஏற்படுவோம், ஒருபோதும் நோய்வாய்ப்படக்கூடாது .மிக்க மகிழ்ச்சி.”. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நூலைப்போல சேலை ,தாயைப்போல பிள்ளை என்கிற பழமொழி சரியாக இருக்கிறதா?
அம்மா -புதிய கணவருடன் வாழத்தொடங்கி இருக்கிற நேரத்தில் வில்லங்கம் வீட்டு வாசலில் நிற்கிறதே!
எஸ்.!பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் தன்னுடைய கணவரைப்பற்றி புகார் கொடுத்திருக்கிறார்.
“சட்டப்படி என்னை டைவர்ஸ் பண்ணாமல் வனிதாவை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார் “என்பதாக.!
வனிதா மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில் ஒன்று “நான் இந்து பெண்.எங்கள் வழக்கப்படி தாலி கட்டுவதுதான் முறையான திருமணம். மோதிரம் மாற்றுவதல்ல!”
ஆனால் வனிதா முறைப்படி கிறிஸ்துவமதத்துக்கு மாறினாரா என்பது தெரியவில்லை.
எலிசபெத் ஹெலன் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்.
“காவல் நிலையம் வந்து பீட்டர் பால் எழுதிக்கொடுத்த கடிதத்தில் முறைப்படி விவாகரத்து செய்து விட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்பதாக இருக்கிறதாம்.ஆனால் இந்த கடிதத்தின் நகலை தனக்கு காவல் நிலைய அதிகாரி தர மறுத்து விட்டார் என சொல்கிறார்.நான்காண்டு காலம் பிரிந்துதான் வாழ்கிறோம் .அவருக்கு குடிப்பழக்கம் உண்டு என்பதாகவும் சொல்கிறார்.அண்மையில் மகனைப் பார்க்க வீட்டுக்கு வந்ததாக சொல்கிறார் ஹெலன்.
ஒரு கோடி ரூபா பணம் கேட்டதாக எலிசபெத் ஹெலன் மீது வனிதா குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது முழு விசாரணையில்தான் தெரியும்.கொலை செய்வதாக வனிதா மிரட்டியதாக ஹெலனும் சொல்கிறார்.
வில்லங்கம் இல்லாமல் வனிதாவினால் வாழவே முடியாதா என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.