கொரோனா லாக்டவுன் ஜுலை 31 ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.படப்பிடிப்புகள் இல்லை.பட விழாக்களும் இல்லை.ஆடுன கால் சும்மா இருக்குமா அதற்கு வேலை கொடுக்க வேண்டாமா?, பெரும்பாலான நடிகர்,நடிகைகள் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவழித்து வருகின்றனர்.
நடிகை வேதிகா தனது பெரும்பாலான நேரத்தை ஆட்டம் பாட்டம் என செலவிட்டு வருகிறார். அவ்வப்போது தனது அட்டகாசமான’குத்தாட்ட’ வீடியோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இதுவரை எந்த நடிகையும் பரதம் ஆடி வீடியோ வெளியிட்டதில்லை. குத்தாட்டம்தான் ஈஸி. வைரலாகும் இவ்வீடியோக்களை வேதிகாவின் ரசிகர்கள் நிறையவே விரும்புகின்றனர்
வேதிகா தற்போது இளைஞர்களிடையே பெரும் வைரலாகி வரும் ‘டாக்கி டாக்கி’ பாடலுக்கு அட்டகாசமாக குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த குத்தாட்ட வீடியோ சமூக வலைத் தளங்களால் பெரும் வைரலாகி வருகிறது.
வேதிகா தற்போது தமிழில் ‘வினோதன்’ என்ற படத்திலும், கன்னடத்தில் ‘உள்துறை அமைச்சர்’என்ற படத்திலும் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ஜங்கிள்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்