
சிற்றின்பத்தை ஆராதனை செய்யாதார் யார் இங்கே?
மாமுனிகளும் தவசிரேஷ்டர்களும் விதி விலக்கல்லவே !அந்த விசுவாமித்திரரே தடுமாறி தன்னை இழக்கவில்லையா !தகப்பனாகவில்லையா!
அந்த சில நிமிடநேர சுகானுபவம் கவிஞர்களை தன்னிலை மறக்க செய்ததே !இந்த பேரண்டம் இயங்குவது அதற்காகவும்தானே!
ராம்கோபால் வர்மா. ஒரு காலத்தில் ஒருவிதமாக இருந்தார் .தற்காலத்தில் வணிகம்தான் வாழ்க்கை என்று சிற்றின்ப ஆய்வுகளில் இறங்கிவிட்டார்.
எந்த கோணத்தில் கேமராவை வைத்தால் பெண்ணின் இளமை தூக்கலாக இருக்கும் என்கிற ஆய்வு அவரை எங்கேயோ கொண்டுபோய் நிறுத்திவிட்டது.
ஆபாச பட நடிகை மியா மல்கோவாவை வைத்து கிளைமாக்ஸ் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டு ஒரு அள்ளு அள்ளியவர் தொடர்ச்சியாக நேக்கட் ,நங்கா ,நகணம் என்கிற அடல்ட் படங்களை எடுத்திருக்கிறார். ஸ்ரீ ரபாகா என்கிற நடிகைதான் ஹீரோயின்.
“ஒரு லட்சத்துக்கு மேல் செலவு இருக்காது” என்கிற விமர்சனம் வந்தபோது ஆர்ஜிவி நக்கலுடன் “அதெல்லாம் இல்லை மொத்த படமே 2000 தான் .!யாருக்கும் நான் பணம் கொடுக்கவில்லை. வேலைக்காரனாக நடித்த அந்த பையனுக்கு மட்டும் 200 ரூபா கொடுத்தேன் “என்றார்.
நகணம் படத்தில் சுத்தமாக உரித்த கோழியாக நடித்த ஸ்ரீரபாகா “நான் 2 லட்சம் கேட்டேன்.எவ்வித முகச்சுளிப்பும் காட்டாமல் ராம் கோபால் வர்மா கொடுத்து விட்டார் .2 வாரத்தில் ஷூட்டிங் முடிந்து விட்டது.டப்பிங் வேலை ஒரு மணி நேரத்தில் முடிந்தது “என்கிறார்.












