
சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் யாருக்குத்தான் கோபம் வராது?
அன்றைக்கு வந்தது பாருங்கள் கோபம், கொக்காக இருந்தால் எரித்திருப்பார்.
பார்வையினாலேயே கொக்கினை எரித்து சாம்பலாக்கிய கவுசிகனின் நினைவுதான் சாய் பல்லவியின் கோபத்தை பார்த்தபோது….!
“நீங்கள் ஒரு மலையாளிப் பொண்ணு !”என்று நியூஸ் ஆங்கர் கேட்டபோதுதான் அப்படியொரு கோபப் பார்வை!
“நான் மலையாளி இல்லை.தமிழ்ப்பொண்ணுன்னு எத்தனை வாட்டி சொல்றது?நான் சென்னைப் பொண்ணு.மலையாளம் பேசுவதால் மலையாளின்னு சொல்லிடறதா? பிரேமம் படத்தில் நடித்ததால் என்னை மல்லு குட்டின்னு பேசுறதா “என்று கோபமாகிவிட்டார்.
அமைதியாகப்பழகுகிற சாய் பல்லவியின் ஆத்திரத்தைப்பார்த்து பலர் அதிர்ந்து போனார்கள்.












