
ஆபாச பட இயக்குநராகிவிட்ட ராம் கோபால் வர்மாவைப் போல கோலிவுட்டிலும் ஒரு புண்ணியவான் இல்லையே என்கிற வருத்தம் ,கவலை நமக்கு வந்தாலும் வந்த விடும் போலிருக்கிறது.
அந்தளவுக்கு ஆபாச படங்களை எடுத்து காசு பார்த்து வருகிறார் ஆர்ஜிவி என்கிற டோலிவுட் பிரபலம் ராம் கோபால் வர்மா.
ஒரு காலத்தில் அவரும் நல்ல படங்களை எடுத்தவர்தான். காலம் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. அதனால் ஏற்பட்ட விளைவோ என்னவோ தற்போது அசுத்தமாகி விட்டார். சர்ச்சைகளை தேடிப்போகிறார். வம்புகளை விலைக்கு வாங்குகிறார்.
சரி இத்துடன் நிற்கிறாரே என்று ஆறுதல் பட்டுக்கொண்டால் “அட மக்குகளே ,வாழ்வதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கிறது .நாளைய சினிமா இப்படி ஆனாலும் ஆகலாம் “என்பதை போல ஆபாசப் படங்களை எடுத்து குவிக்க ஆரம்பித்திருக்கிறார் .
இவரது கிளைமாக்ஸ் என்கிற படம் முதல்படமாக ஆபாசமுடன் ஓடிடி தளத்தில் வெளியாகி வெள்ளிப்பணங்களை அள்ளியது. குறைந்த முதலில் நிறையப்பணம் என்றால் சும்மா இருக்க முடியுமா?
அடுத்து ‘நேக்கட் ‘என்கிற பெயரில் ஒரு படம்.. அதுவும் சொந்தமான ஓடிடி தளத்தில்.!
ஒரு ஆளுக்கு 200 ரூபா.
ஆர்ஜிவி தியேட்டர் அள்ளியது! சாக்குப்பைகளில் கட்டுவதாக கேள்வி.! கல்வித் தந்தைகளும் சாராய வியாபாரிகளும் செய்வதைப்போல.!
தற்போது ‘திரில்லர்’என்கிற பெயரில் முன்னிருப்படங்களைத் தொடர்ந்து எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
“வானத்தில் இருந்து இறங்கிய ‘தேவதையாக ‘( அப்சரா ) ஆர்,ஜி.வி.தியேட்டருக்கு வந்த அப்சரா ராணி “என்கிற சிறப்புரையுடன் அந்த நடிகையின் அட்டகாசமான கட்டான மேனி வெட்ட வெளியில் காய்வதைப் போன்ற படங்களை வெளியிட்டிருக்கிறார்.
இந்தாளுக்கு மட்டும் எப்படியா பார்த்தவுடனேயே உணர்வுகளை தூண்டுகிற அழகிகள் சிக்குகிறார்கள் என்கிற பொறாமை வராமல் இருக்காது.
அந்த நடிகை டேராடூனில் பிறந்து வளர்ந்த சொட்டைவாலைக்குட்டியாம். தற்போது ஹைதராபாத்தில் வாழ்க்கை.
எப்படியோ மேனி அழகினைக் காட்டுவதற்கு இவருக்கென சில சிலை அழகு சிங்காரிகள் வந்து சிக்குகிறார்கள்.வரட்டும் காட்டட்டும்.!












