
அப்பாடா இப்போதுதான் தெளிவாகி இருக்கிறது. கொரானாவின் கலக்கலில் குழப்பம் அடைத்திருந்த படப்பிடிப்புகளின் ஷெடியூல் விவரம் மேலோட்டமாக தெரியத்தொடங்கி இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உலகமே காத்திருக்கிற படம் கல்கியின் பொன்னியின் செல்வன்.
மணிரத்னத்தின் இயக்கம் என்பதால் கூடுதல் ஆவல். தேர்ந்த சிற்பியின் கலைவடிவமைப்பு எப்படி இருக்கும் என்கிற ஆவல். நாவலை பன்முறை படைத்தவர்களும் இருக்கிறார்கள்.
இதுவரை படத்தில் நடிப்பதற்காக உறுதி செய்யப்படடவர்களில் ஐஸ்வரிய ராய் பச்சன் ,கீர்த்தி சுரேஷ் ,ஜெயம் ரவி ,கார்த்தி ,சரத்குமார் ,சீயான் விக்ரம் ,ஆரவ் ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி ,ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். நயன்தாராவுக்குப் பதிலாகத்தான் திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
கோவிட் 19 காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
சீயான் விக்ரம் -ஐஸ்வர்யா ராய் பச்சன் இருவரும் கலந்து கொள்கிற ஷூட்டிங் புனேயில் ஆரம்பமாகிறது என்கிற சேதி மணிரத்னத்தின் வட்டத்தில் பேசப்படுகிறது.












