தலைவி என்கிற பெயரில் இயக்குநர் ஏ எல் .விஜய் ஒரு படத்தை இயக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்கிற பெயரில் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் கங்கனா ரனாவத் தலைவி ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடிக்கிறார் ,ஜானகி ராமச்சந்திரனாக மது நடிக்கிறார். இந்த கதையில் ஜெயலலிதாவின் அம்மா வேதவல்லியாக ( சந்தியா .) பாக்ய ஸ்ரீ நடிக்கிறார்.இவர் மைனேபியார் ஹை என்கிற சில்வர் ஜூபிலி படத்தில் நடித்தவர் .
“தலைவி படத்தில் கங்கனாவுடன் நடிப்பதில் பெருமையாக இருக்கிறது .எனக்கும் அவருக்கும் அதிக அளவில் காட்சிகள் இருக்கிறது “என்கிறார் பாக்ய ஸ்ரீ.