லாக்டவுன் நாளில் இருந்து தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்புக் கட்டிடத்தின் முன் ஆட்டம் போடுவது போல் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,’இந்த கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் முதலில் வெளியே வந்து இதேபோன்று ஆட்டம் போட வேண்டும்’ என்றும்குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சலி,அனுஷ்காவுடன் இணைந்து நடித்த ‘நிசப்தம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது என்பதும்,இதையடுத்து ’நேர் கொண்ட பார்வை’ தெலுங்கு ரீமேக் படமான ‘வாகேல் சாஹிப்’ படத்திலும் தமிழில் ’காண்பது பொய்’, ’ஓ’, ’பிக்பாஸ்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .