அரசியலில் எதுவும் நடக்கலாம் .குறிப்பாக இது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அது என்ன ‘இது’?
மாடல் அழகி மீரா மிதுன் திமுகவில் இணைந்தாலும் வியப்பதற்கில்லை. அதுதான் அந்த ‘இது’
விந்தைகளும் வேடிக்கைகளும் நடப்பதுதானே அரசியல்.!
தன்னை எந்த கோணத்திலும் வெளிப்படுத்துவதற்கும் மீரா தயங்கியதில்லை. கவர்ச்சியா,இதுதான் எல்லையா ,இல்லை அதற்கு மேலும் எதுவும் உள்ளதா என்று உடல் அழகினை உரித்துக்காட்டியவர் மீரா மிதுன்.
அவ்வப்போது அரசியலுக்கும் வருவார். “லஞ்ச ஊழல் பெருத்து விட்டது.எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புங்கள் .என்னை முதல்வராக நியமியுங்கள் .லஞ்சத்தை ஒழித்துக் காட்டுகிறேன்” என்று பிரதமர் மோடிக்கு டிவீட் பண்ணுவார்.
மத்தியில் ஆளுகிற பாஜக வையும் விட்டு வைப்பதில்லை.அவ்வப்போது கொளுத்திப் போடுவார் .
இவருக்கும் பாஜக அரசு ஒரு பதவியைக் கொடுத்து பின்னர் பறித்துக்கொண்டது. மெத்தப் படித்தவர் என்பதில் சந்தேகமில்லை.
அண்மையில் இவர் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறார்.
கட்சியில் சேருவதற்காக இருக்குமோ என்னவோ.!
“புதிய சகாப்தம் உருவாக்குவோம் “என்று உதயநிதியையும் “ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் “என்று மு.க.ஸ்டாலினையும் ‘டேக்’ செய்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்
.நாளை எதுவும் நடக்கலாம்