பலவிதமான விமர்சனங்களை சந்தித்தவர் விஜய் ஆண்டனி.
வேட்டைக்காரன் ,காதலில் விழுந்தேன் ,அங்காடித்தெரு ஆகிய படங்களின் இசை அமைப்பாளர்.
நான் படத்தின் வழியாக கதையின் நாயகனாகவும் களம் இறங்கினார்.தொடர்ந்து சிலப்படங்களில் நடித்திருந்தாலும் அவரை உயர்த்தியது பிச்சைக்காரன் என்கிற படமே. ஆந்திரத்திலும் இவருக்கு இடம் கிடைத்தது.
‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி தற்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது.
.இப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வரும் 24ஆம் தேதி, விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் ஆண்டனியின் 10 வது படமாக உருவாகிறது.
.தற்போது விஜய் ஆண்டனி தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்