“நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையில் மர்மம் இருக்கிறது ,சி.பி.ஐ .விசாரணை வேண்டும் ” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்தவர் நடிகை ரியா சக்ரவர்த்தி. தன்னை சுஷாந்தின் ‘கேர்ள் பிரண்ட் ‘என்பதாக பகிரங்கமாக தன்னை அறிவித்துக் கொண்டிருப்பவர் .
பாலிவுட்டில் வாரிசு நடிகர்களுக்கே முன்னுரிமை என்கிற சித்தாந்தம் வலுவாக கால் பதித்திருப்பதாக ‘நெபோட்டிசம் ‘என்பதற்கு எதிரான போர்க்குரல் வலுவாக எழுந்திருக்கிறது. பிரபல நடிகர் சல்மான்கான் இன்னும் சிலர் மீது பாலிவுட் புள்ளிகள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.சுஷாந்த் தற்கொலைக்கு நெபோட்டிசம் தான் காரணம் என்பதாக சொல்லப்படுகிறது.
சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக தொடர்ச்சியாக போராடி வருகிற நடிகைதான் நடிகை ரியா.காதலனை இழந்த வலி.அவரை போரிட வைத்திருக்கிறது.
இதனால் சிலர் ரியாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்துக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தனர்.
“உன்னை கற்பழித்து கொலை செய்து விடுவோம்.அதற்குள் நீ தற்கொலை செய்து கொள் .உன்னை தீர்த்துக்கட்ட ஆட்கள் ரெடி “என்பதாக அச்சுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சாந்தா குருஸ் போலீசில் புகார் செய்திருந்தார் ரியா .சைபர் கிரைம் தொடர்பான அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது மராட்டிய அரசு இந்த விவகாரத்தில் முனைந்து செயல்பட்டதால் இரண்டு முக்கிய புள்ளிகள் மாட்டியிருக்கிறார்கள் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது