ஏழுமலையானுக்கு சேவகம் செய்யும் மெய்யடியாராக இருந்தாலும் சரி அகில உலக அழகியாக இருந்த ஐஸ்வரியாராயாக இருந்தாலும் சரி ,கோவிட் 19 க்கு அடிமைதான். விரும்பினால் எடுத்துக்கொள்ளும், விரும்பாவிடில் விட்டு விடும்.கொரானாவின் கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுகிற நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் .நம்புவோம்.
தற்போதைய பட்டியலில் இணைந்திருப்பவர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா .
சோதனை செய்ததில் கோவிட் 19 பாசிட்டிவ் என்பது உறுதியாகி இருக்கிறது.
வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டுவருகிறார்.தன்னுடன் கடந்த இரு நாட்களில் பழகிய நண்பர்கள் குழுவினர் தங்களை சோதித்துப் பார்த்துக்கொள்ள சொல்லி கோரிக்கை விடுத்திருக்கிறார்.