
யானைக்கு அல்வா கொடுத்தவர்கள் வாழ்ந்த இந்த இந்தியாவில் பங்களாவுக்கு பாலித்தீன் கவர் போட்டு மூடுவது என்ன அதிசயமா?
என்னய்யா இது பைத்தியக்காரத்தனமா இருக்கு என்று கேட்டால் இதற்கு பதில் வட இந்தியாவில்தான் இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சாமானிய மக்கள் முதல் மிக முக்கிய பிரமுகர்கள் பிரபலங்கள் என யாரும் கொரோனாவுக்கு தப்பவில்லை. தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை செயலாளர் வீட்டிலேயே கொரானா டேரா அடித்திருக்கிறது.
எல்லோரையும் பதம் பார்த்துகொண்டிருக்கிறது.
பாலிவுட்டின் முக்கிய நட்சத்திர குடும்பமான அமிதாப் பச்சனின் குடும்பமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மத்தியில் எச்சரிக்கை அலாரத்தை அடித்துள்ளது.
இதனால் பிரபல நடிகர்கள் பலரும் கூடுதல் கவனத்தோடு செயல்பட தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் நடிகர் ஷாருக் கான் குடும்பத்துடன் வசிக்கும் பிரமாண்ட பங்களா பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது என்கிறார்கள்.. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷாருக் கான் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருப்பதால் இந்த தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஷாருக் கான் ஏற்கனவே தனது 5 அடுக்கு மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












