“அய்யா ,தஞ்சாவூர்க்காரக யாராவது இருக்கீங்களா.?”
“சொல்லுங்க .நாங்க அந்த சீமையை சேர்ந்தவங்கதான் .என்ன சங்கதிப்பூ?”
“உங்களுக்கு ரெண்டு தாரமா ?”
“வாயை கிழிச்சு தச்சுப்பிடுவேன்.! கொழுப்பெடுத்துப்போச்சா?”
“மன்னிச்சுக்கங்கப்பு ! தப்பா கேட்டுப்புட்டேன்.”என்று அவரிடம் இருந்து தப்பிப்பிழைத்து வந்தவர் இப்படி முணு முணுத்தார் .
“மூணு கல்யாணம் பண்ணுன பொண்ணு பொய்யா சொல்லும்?”
சமூக வலை தளங்களில் தன்னுடைய தரப்பு நியாயத்தை சொல்லி வருகிற வனிதா விஜயகுமார் ஒரு வீடியோவில் “நாங்க தஞ்சாவூர்.. எங்க அப்பாவுக்கு தஞ்சாவூர்தான். அந்தப் பக்கமெல்லாம் ரெண்டு பொண்டாட்டிங்றது ஒரு விஷயமே இல்லை. ஏன் என் அப்பாவுக்கு கூட இரண்டு மனைவிகள்தான்! , தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்கு இரண்டு திருமணம்தான் பண்ணியிருப்பாங்க. அது தான் அங்க வழக்கம் .அது தவறு இல்லை” என்று வனிதா அந்த வீடியோவில்சொல்லியிருந்தார்.
இதனால் பொங்கிவிட்ட தஞ்சாவூர் காங் கட்சி ,மற்றும் பாஜகவினர் போலீசில் வனிதா விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்திருக்கிறார்கள்.
அரசியல் ரீதியாக வனிதாவை உயர்த்திவிட்டது அவரது மூணாவது கல்யாணம்.!