கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகர் பிருத்விராஜ்.
மலையாளத்தில் முன்னணி நடிகர் .படப்பிடிப்புக்காக பாரின் போய் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டு நாடு திரும்பியவர். ,
பிளஸ்சி இயக்கத்தில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். மற்றொரு இளம் நடிகர் துல்கர் சல்மான். நடிகர் மம்முட்டியின் மகன் , தமிழில், வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இருவரும் பிரபல நடிகர்களின் வாரிசுகள்.நண்பர்கள்.அதோடு சொகுசு கார் பிரியர்கள் இருவரிடமும் சில வெளிநாட்டு சொகுசு கார்கள் உள்ளன.
சரி விசயத்துக்கு வருவோம்,
கேரள மாநிலம் கோட்டயம் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சொகுசுகள் கார்கள் போட்டிபோட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்து சென்று கொண்டிருந்தன. அதில் ஒன்று நடிகர் பிருத்விராஜூக்குச் சொந்தமான போர்ச்சே கார்.மற்றொன்று நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான லம்போகினி வகை கார்.
இந்த இரண்டு கார்களும் சாலையில் மின்னல் வேகத்தில் பறந்தன. அதைப்பார்த்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, பின்னர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டார்கள்..
இந்த வீடியோ கடந்த சில நாட்களாக கேரளாவில் வைரலாகி வருகிறது. ஆனால், எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்கிற விவரம் அதில் இல்லை
இதையடுத்து விதியை மீறி, வேகமாக இந்த கார்கள் சென்றதா என்பது பற்றி,சாலைகளில் உள்ள கேமரா மூலம் சோதனை நடத்தி, விசாரணை நடத்த மாநில மோட்டார் வாகன துறை உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் கார்ரேசில் ஈடுபட்டது தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.