கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள அன்லாக் 3.0 காலகட்டத்தில் தியேட்டர்களை திறக்க, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை செய்துள்ளதோடு சில நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது
1, திரையரங்கிற்குள் செல்லும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயமாக காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.
2, தியேட்டர்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கடுமையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்
.3, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட்டுக்கள் வழங்க வேண்டும்.
4,நுழைவுபகுதி மற்றும் வெளியேறும் பகுதிகளில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க, போதுமான நேர இடைவெளியுடன் திரைப்படங்களை திரையிட வேண்டும்
5, பார்வையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பார்வையாளர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு இருக்கை இடைவெளி இருக்க வேண்டும்.
6, திரையரங்குகளில் 50 சதவிகிதம் நபர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்.
ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னரும் தியேட்டர் இருக்கைகள் தகுந்த கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கப்பட வேண்டும்.
7,அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொது இடத்தில் சானிடைசர்கள் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுடன் அன்லாக் 3.0 காலகட்டத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கலாம் என இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களும் இந்த நிபந்தனைகளை ஏற்பதாக கூறியுள்ள நிலையில், தமிழக அரசின் முடிவை திரையுலகினர் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.