கடந்த 2011-ல் திருமணம் செய்துகொண்ட செல்வராகவன் – கீதாஞ்சலி தம்பதிக்கு 2012 ஜனவரியில், லீலாவதி என்ற மகளும்,அக்டோபர் 2013 -ல் ஓம்கர் என்ற மகனும் பிறந்தனர்
7 வருடங்களை கடந்து விட்ட நிலையில் தற்போது கீதாஞ்சலி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்கிறார்கள்.
இதற்கு காரணம் கீதாஞ்சலி தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் (கர்ப்பத்துக்கு முன்பு மற்றும் கர்ப்பத்துக்கு பின்பு என மெலிதான வயிற்றுடன்) தனது 2 வித தோற்றங்களை வெளியிட்டுள்ளது தான்.
இப்புகைப்படங்களை பார்த்த பலரும் அவரிடம், 3 வது குழந்தை மற்றும் கர்ப்பம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் .
ஆனால் இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து கீதாஞ்சலியோ, செல்வாவோ எதுவும் பதிலளிக்கவில்லை, ஆனால் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
செல்வராகவன் தற்போது தனுஷுடன் இணைந்து தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதி வருகிறார்,
இது ‘புதுபேட்டை 2’ ஆக இருக்கலாம். அவர் தனது வரலாற்று கற்பனைத் திரைப்படமான ‘நான் ருத்ரன் படத்துக்காக மீண்டும் தனது தம்பி தனுசுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, அதில் அவர் சம்பந்தப்பட்ட பகுதிகளை இயக்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.