
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் பலகோடிகளை இழந்திருப்பதாக சில தகவல்கள் வந்திருக்கின்றன.
அற்புதமான தண்ணீர் வசதி ,அருமையான இடம் ,எதிர்காலத்தில் அங்கு விண்ணுயர அடுக்குமாடிக்கட்டிடங்கள் வர இருப்பதாக சொல்லப்பட்டதை நம்பி பல விவிஐபிகள் அங்கு ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கியிருப்பதாக தெரிகிறது.
அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் பல லட்சம் செலவில் வாங்கிய இடங்களை கோடிக் கணக்கில் விலை பேசி விற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி கொடிகளை கொட்டி வாங்கியவர்களில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி ,நடிகைகள் நயன்தாரா ,ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இருக்கிறார்களாம் .ஆனால் அந்த இடம் விவசாய நிலம் என்பதாகவும் அங்கு கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சம் என வாங்கிய நிலம் 10 கோடி வீதம் விற்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த ரியல் எஸ்டேட் கம்பெனியின் பங்குதாரர்கள் மத்தியில் பிரச்னை ஏற்பட்டிருப்பதால் கொடுத்த பணம் திரும்ப வருமா என்கிற கவலையில் இருக்கிறார்களாம் முதலீடு செய்தவர்கள்.
சில ரியல் எஸ்டேட் கம்பெனியின் மோசடிகளை பற்றி படம் எடுக்கிற சினிமாக்காரர்கள் ஏமாந்திருப்பதுதான் ஹைலைட் என்கிறார்கள்.












