பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் ஒரு மர்மக்கதையாக நீள்கிறது.
நெபோட்டிசம் -வாரிசுகளின் ஆதிக்கம் என பலர் சொல்லிவருகிறார்கள். பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
பாஜக.,காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
சுஷாந்த் சிங்கின் காதலி மீதே குற்றம் சாட்டியிருக்கிறார் சுஷாந்தின் அப்பா.
இப்படி சுஷாந்த் சிங்கின் மரணம் பற்றி ஆளுக்காள் காரணம் சொல்லிவருகிற நிலையில் கங்கனா ரனாவத் திடுக்கிடக்கூடிய அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“நான் எனது வீட்டில் தூக்கில் தொங்கினால் ,நான் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.”என கங்கனா சொன்னதாக அவரது டீம் டிவீட் செய்திருக்கிறது.
சுஷாந்த் மரணத்தில் ஒரு அரசியல் பிரமுகருக்கு முக்கியத் தொடர்பு இருக்கிறது. சுஷாந்த் மரணம் அடைவதற்கு முன்னதாக அளித்த விருந்தில் அந்த பிரமுகர் கலந்து கொண்டு நடிகருடன் பேசி இருக்கிறார்.
இதைத்தான் கங்கனா குறிப்பிடுகிறார்.
அந்த டிவீட்டில் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான் தனக்கு மரணம் சம்பவிக்கலாம் என்பதை சூசகமாக சொல்லியிருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது
“அனைவருக்குமே தெரியும்.ஆனால் யாரும் அவரது பெயரை முணுமுணுக்க முடியாது. கரண் ஜோகரின் பெஸ்ட் பிரண்ட் . உலகிலேயே சிறந்த முதலமைச்சரின் சிறந்த பிள்ளை ,செல்லமாக பேபி பெங்குயின் என்பார்கள். நான் என்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கினால் ப்ளீஸ் தெரிந்துகொள்ளுங்கள் நான் தற்கொலை செய்துகொள்ளவில்லை.”