
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் …..
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தபடம். இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி என்கிற புதியவர்.
இந்தப்படம் தமிழ் தெலுங்கு இரண்டிலும் ரசிகர்களின் சிறந்த பாராட்டினை பெற்றிருந்தது.
அண்மையில் இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த்,இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி தள்ளியுள்ளார்.
இதனை உறுதி படுத்தும் வகையில் இயக்குனர் தேசிங்கும் தனது ட்விட்டரில், ரஜினி வாழ்த்து குறித்து பதிவிட்டு இருந்தார். தற்போது நடிகர் ரஜினி அவரிடம் பேசிய ஆடியோ பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ பதிவில், “படம் சூப்பர்.. எக்சலண்ட்.. ரொம்ப சூப்பர்.. நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு… சாரி.. இப்ப தான் படத்தை பார்க்க டைம் கிடைச்சது.எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க.. சீரியசா சொல்றேன்.. திங்க் பண்ணுங்க..” என தெரிவித்துள்ளார்.












