
‘மகா’ -காதல் முறிவுக்குப் பின்னர் சிம்பு ,ஹன்சிகா நடித்திருக்கிற படம் .அறிமுக இயக்குனர் யு.ஆர். ஜமீல் இயக்கியிருக்கிறார் .சிம்பு சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும் அந்த ஜோடியை திரையில் பார்க்க ஆசையுடன் காத்திருக்கிறார்கள். 
இதன் அறிமுக போஸ்டரில் ஹன்சிகா ரத்தத் தொட்டியில் படுத்திருப்பது போலவும் இன்னொரு போஸ்டரில் சாமியாரிணி வேடத்தில் கஞ்சா புகைப்பது போலவும் காட்சி அளித்திருந்தார். சர்ச்சைகளை அள்ளியது .
சமீபத்தில் இவர் வெளியிட்ட பொட்டேட்டோ சிப்ஸ் உடை வைரலான நிலையில் தற்பொழுது கருப்பு நிற முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை காட்டியவாறு கழுத்தில் கைக்குட்டை கட்டிக்கொண்டு, கருப்பு நிற குளிர் கண்ணாடியு டன் நானும் ரவுடிதான் எனபுதிய கெட்டப்பில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.












