கங்கனாவை மிரட்ட துப்பாக்கியினால் சுட்டனரா?
கொரானாவுக்கு அடுத்து திரையுலகினரை அதிரச்செய்திருப்பது சுஷாந்த் சிங் மரணம்தான்.!
அது திட்டமிட்ட கொலை என்று பலர் வாதிடுகிறார்கள். பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியே பிரதமருக்கு கடிதம் அனுப்புகிறார் என்றால் அந்த மரணத்தின் தாக்கம் யார் யாரையோ அசைக்கிறது என்றுதானே அர்த்தம்?
இந்த பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே கடுமையாக போராடுகிறவர் நடிகை கங்கனா ரனாவத்.
‘பாலிவுட் மாபியா கேங் கின் வன்கொடுமை”என்று சொல்லிவருகிறார். இவர் பாலிவுட் நடிகை என்றாலும் வாழ்வது மனாலியில். ! அண்மையில் கடுமையான குற்றச்சாட்டினை பதிவு செய்திருந்தார்.
“நான் என்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கினால் அது தற்கொலை அல்ல “என்று சொல்லியிருந்தார் .
தற்போது தன்னுடைய வீட்டின் அருகில் துப்பாக்கியினால் சுடுகின்ற சத்தம் கேட்டதாக திடுக்கிடும் ஒரு தகவலை சொல்லியிருக்கிறார்.
அவர் என்ன சொல்லுகிறார் என்பதை கேட்போம்.
“இரவு 11.30 மணியிருக்கும் .நான் என்னுடைய படுக்கை அறையில் இருந்தேன் .அந்த வீடு மூன்று மாடி கட்டிடம். அந்த வீட்டுக்கு சுற்றுச்சுவர் இருக்கிறது. அதன் பின்னால் ஆப்பிள் தோட்டம். அந்த இரவு நேரத்தில் வெடி சத்தம் கேட்டது. பட்டாசாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.ஆனால் மறுபடியும் வெடி சத்தம்.
அது துப்பாக்கி சுடுகின்ற சத்தமாக இருக்கும் என்கிற பதட்டம் ஏற்பட்டது.
நான் என்னுடைய பாதுகாப்பு அதிகாரியை கூப்பிட்டு “அது என்ன சத்தம் “என்று கேட்டேன்.
யாரோ சிறுவர்கள் அல்லது வேறு யாராவது இருக்கலாம் என்று சொன்ன அந்த மனிதருக்கு துப்பாக்கியின் சத்தம் எப்படி இருக்கும் என்பது தெரியாது போல. ஆனால் எனக்கு தெரியும் .எங்கள் வீட்டில் ஐந்து பேர் இருக்கிறோம். அவர்கள் துப்பாக்கி குண்டின் சத்தத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே நான் போலீசுக்கு போயிருக்கிறேன்” என்கிறார் கங்கனா .