
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இன்று முற்பகல் திடீரென கலைப்புலி தாணு முன்னிலையில் ஒரு கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில் கமீலா நாசர் ,வி.சேகர் ,கே.ராஜன் ,கலைப்புலி சேகரன் ,உள்ளிட்ட ‘அசல்’ தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். ‘நடப்பு ‘தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதி ராஜாவுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் .
“தற்போது சங்கம் அரசு பிரதிநிதி வசம்தான் இருக்கிறது .வேறு யாரும் பொறுப்பில் இல்லையே. ஆகவே எதற்காக இன்னொரு சங்கம்? அதனால் நமக்குள் பேசித் தீர்த்து கொள்ள முடியும். வாருங்கள். புதிய அமைப்பை கலைத்து விட்டு வாருங்கள்” என்பதாக பாரதிராஜாவுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதற்கு பாரதிராஜா என்ன பதில் சொல்லப்போகிறாரோ ,தெரியவில்லை.!












