
மதயானைக் கூட்டம்’ விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இராவண கோட்டம்’.நல்ல நேரம் பார்த்துதான் டைட்டில் வைத்திருக்கிறார்கள். காலத்தின் கட்டாயம்.
ஷாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் நாயகியாக கயல் ஆனநதி நடித்து வருகிறார்.
இப்படம் குறித்து நடிகர் ஷாந்தனு பாக்யராஜ் கூறுகையில், “பல ஆண்டுகளாக எங்கள் குடும்ப நண்பராக இருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, எனது வளர்ச்சியில் மிகவும் அக்கறை கொண்டு எனக்காக பிரார்த்தனை செய்பவர்.
சினிமாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் எனக்கு ஒரு திருப்புமுனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ‘இராவண கோட்டம்’ படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கிறார். படத்தயாரிப்பு தாமதமாகி நீண்ட போதிலும், பொறுமை காக்கும் அவர், எங்களிடம் “அவசரம் காட்ட வேண்டாம் சிறப்பான முறையில் படத்தை உருவாக்குங்கள்” என்றுதான் சொல்கிறார். தற்போது சூழ்நிலை காரணமாக நாங்கள் அமைதி காத்து வருகிறோம். “‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எனக்கு எந்த லாபமும் வேண்டாம். தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிக்க நான் போட்ட முதலீடு மட்டும் திரும்ப வந்தால் போதும்” என்று அவர் உறுதிபடக் கூறிவிட்டார்”. என்கிறார் ஷாந்தனு.












