நடிகர் நகுல் – ஸ்ருதி ஆகியோரது திருமணம் இன்றுகாலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் நடந்தது..
‘
பாய்ஸ்’, ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘நான் ராஜவாகப் போகிறேன்’, ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ உட்பட பல படங்களில் நடித்தவர், நகுல். நடிகை தேவயானியின் தம்பி. இவரும், சென்னையில் சினிமா நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஸ்ருதி பாஸ்கர் என்பவரும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்தமாதம் சென்னையில் நடந்தது. அவ்விழாவில் இருவரது திருமணத்தையும் பிப்ரவரி 28 ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி,இன்று காலை,நடிகர் நகுல் – ஸ்ருதி ஆகியோரது திருமணம் இன்றுகாலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் வைதீக முறைப்படி நடந்தது..காலை 10.41க்கு நகுல் எழுந்து நின்று மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். திருமணதிற்கு திரையுலக பிரமுகர்கள் பலர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.












