
“அண்ணே ,நீங்க பெரிய அறிவாளிண்ணே ” என்று செந்தில் பாணியில் சொல்லவேண்டும் போலிருந்தது மத்திய மந்திரி சொன்ன புத்திசாலித்தனமான ‘அறிவுரை’யை கேட்டபோது.!
மத்திய பாஜக மந்திரிசபையில் நீர் வளத்துறை இணை மந்திரியாக இருப்பவர் அர்ஜுன் ராம் மேக்வால்.
இவர் அப்பள கம்பெனிக்கு என்ன உறவோ தெரியாது அந்த “பாபிஜி அப்பள’த்துக்கு பிராண்ட் அம்பாஸடர் மாதிரி அப்பளத்தைக் காட்டி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
“பாபிஜி அப்பளம் ‘கொரானா எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அதனால் சுயசார்பு பொருளாதாரத்தில் தயாரிக்கப்பட்ட பொருளை மக்கள் ஆதரிக்க வேண்டும்”என்று மக்களை கேட்டுக்கொட்டிருந்தார்.
அவர் அந்த அப்பளத்தை சாப்பிடவில்லை போலும்.! அவருக்கு கொரானா வந்திருக்கிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.தற்போது தேறி வருகிறாராம்.












