மீரா மிதுன் என்கிற மாடலை விஜய் டி .வி.தனது பிக்பாஸ் நிகழ்ச்சி வழியாக பிரபலப் படுத்தியது. அவர் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்பதாக சொல்லிக் கொள்வார்.அரை நிர்வாணப்படங்களை அடிக்கடி அவரது டிவிட்டர் பதிவில் வெளியிடுவார்.
தன்னை தமிழகத்தின் முதல்வராக நியமிக்கச்சொல்லி பிரதமருக்கு டிவீட் பண்ணுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .
அண்மையில் தளபதி விஜய் ,சூர்யா இருவரையும் மிகவும் மோசமான முறையில் ஆபாசமாக திட்டியிருந்தார். அவர்களது மனைவியரையும் இழிவுடன் பதிவிட்டிருந்தார். இதற்கு முன்னர் கமல்ஹாசனையும் ஐஸ்வர்யா ராஜேஷையும் ஆபாசமாக அர்ச்சித்தவர் தான் இந்த மாடல்.
இவரது பதிவினால் ஆத்திரமடைந்த சூர்யா ,விஜய் ரசிகர்கள் பொறுக்க இயலாமல் பதிலுக்குப்பதில் அவரது வழியிலேயே ஆபாசமாக டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார்கள்.
மீரா மிதுனின் பதிவுகள் எல்லை தாண்டிப் போவதைப்பார்த்த இயக்குனர் இமயம் பாரதிராஜா மூத்த கலைஞர் என்கிற உரிமையில் நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் அந்த பெண்ணின் ஆட்டம் சற்றே முழுமையாக அடங்கியதாக இல்லை,
தன்னுடைய ரசிகர்களுக்கு சூர்யா விடுத்த கோரிக்கையை மீரா நக்கல் செய்து பதிவிட்டிருக்கிறார். சூர்யாவின் டிவீட் இது.
“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.”