மகா ,மாநாடு இரண்டு படங்களுக்கு அடுத்து சிம்புவின் திட்டம் என்ன?
என்றைக்கும் தன்னுடைய மார்க்கெட்டை உச்சத்திலேயே வைத்திருக்கிற நடிகர்களில் சிலம்பரசனும் ஒருவர். எம்.ஜி.ஆருக்கு அடுத்து எஸ் டி.ஆர் .என்கிற பெயர்தான் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது.
பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் இயக்குனர் மிஸ்கின் பேசியபோது “அடுத்து தன்னுடைய இரண்டு படங்களுக்காக அருண் விஜய் ,எஸ்.டி.ஆர் ஆகிய இருவருடனும் பேசியிருப்பதாக” சொல்லியிருக்கிறார்.
சுரேஷ் காமாட்சியின் மாநாடு முடிந்ததும் மிஷ்கினுடன் சிம்பு இணையக்கூடும். ஊரடங்கு ஒழிந்த பின்னர் அருண் விஜய்யின் பட வேலைகள் தொடங்கி விடும்.
சிம்புவுடன் இணைந்து நடிக்கப்போகிற கதாநாயகி யாராக இருக்கக்கூடும்?
உலகநாயகனின் மகள் ஸ்ருதிஹாசனுடன் பேச்சு நடத்துவதாக சொல்கிறார்கள்.அவரின் கையில் தற்போது இரண்டு தெலுங்குப்படங்கள் இருக்கிறது.
தமிழில் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ வெளியாக இருக்கிறது. மக்கள்செல்வன் விஜய்சேதுபதிதான் ஸ்ருதியின் கதாநாயகன்.
.
Meanwhile, Simbu will be next seen in Maha with Hansika Motwani. He also has Maanaadu by Venkat Prabhu. The film has an ensemble of cast list including SJ Suryah, Daniel Annie Pope, SA Chandrasekar, Bharathiraja among the others. Shruti Haasan, on the other hand, will be next seen in Krack with Ravi Teja. The Gopichand Malineni directorial marks Shruti Haasan’s re-entry to the Tollywood film industry.