ரெஹானா பாத்திமா. பெண்ணியவாதி.மாடலும் ஆவார். அடிக்கடி கேரளத்தில் பரபரப்புகளை கொளுத்திப்போடுகிறவர்.
ஐந்து வேளை அனுதினமும் தொழுகை நடத்தி வந்தவர் வாழ்க்கையில் திடீர் மாற்றம் பெற்றோரின் மறைவு.
இதன் பிறகுதான் பெண்ணியவாதியாக மாறினார். திடீரென நெற்றியில் விபூதி பூசி கொண்டார். இருமுடிக்கட்டி சபரிமலைக்கு புறப்பட்டார்.
இப்படி போலீசாருக்கு திடுக்கிடும் சோதனைகளை அவ்வப்போது தந்து கொண்டிருந்தவர் தற்போது என்ன செய்திருக்கிறார்.
போக்சோ சட்டத்தில் பிடித்துப்போடுகிற அளவுக்கு இவர் செய்த குற்றமென்ன?
தன்னுடைய அரை நிர்வாண உடம்பில் அதாவது இடுப்புக்கு மேலே தன்னுடைய இரு குழந்தைகளை சித்திரங்கள் வரைய சொல்லி அதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
பிள்ளைகள் ஓவியம் வரைவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா ,இது குழந்தைகளின் மனதினை கெடுக்கும் செயல் என பல புகார்கள் கிளம்பவே கேரள போலீசார் ரெஹானா பாத்திமாவை போக்சோ சட்டத்தில் பிடித்துப்போட்டிருக்கிறார்கள்.