மூத்த நடிகை ஊர்வசி வலிமையான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிரட்டலான உளவியல் த்ரில்லர் (Psychological Thriller) திரைப்படமான ‘ஆஷா’ (Aasha), மலையாளம் ZEE5 ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. சஃபர் சனல் இயக்கத்தில் விநாயகா அஜித் தயாரித்த இத்திரைப்படம், கடந்த செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது உலகெங்கிலும் உள்ள பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் நோக்கில், மலையாள அசல் பதிப்புடன் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் இப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஒரு சாதாரண விதவைப் பெண்ணான ஆஷா (ஊர்வசி), எதிர்பாராத ஒரு சாலை விபத்திற்குப் பிறகு ஜீமோன் (ஜோஜு ஜார்ஜ்) என்ற மர்மமான ஆக்ரோஷக் கதாபாத்திரத்துடன் மோதலில் சிக்கிக் கொள்வதே இதன் கதைக்களம். இத்திரைப்படத்தை வழக்கமான த்ரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டதாக மாற்றுவது, அது பார்வையாளர்களுக்கு கதாபாத்திரங்களை முற்றிலும் ஹீரோ, வில்லன் எனப் பிரிக்காமல், சரி எது தவறு எது என்ற எல்லையை மங்கச் செய்து பார்வையாளர்களின் கண்ணோட்டத்தைத் திரைக்கதை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறது. இத்திரைப்படத்தின் அசாத்திய மையக் கருத்து ‘பட்டாம்பூச்சி விளைவு’ (Butterfly Effect) என்ற தத்துவத்தின் அடிப்படையிலிருந்து உருவாகியுள்ளது. அதாவது, நம் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவமற்றதாகத் தோன்றும் சில சிறிய முடிவுகள்கூட, ஆரம்பத்தில் கற்பனை செய்திராத அளவிற்குப் பிற்காலத்தில் எவ்வளவு பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதே இதன் பிரதான த்ரில்லிங் கருத்தாகும்.
இதுகுறித்து ZEE5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளின் வணிகத் தலைவர் (Business Head) லாயிட் சி. சேவியர் பேசுகையில்,
“பார்வையாளர்களின் வழக்கமான கண்ணோட்டத்திற்குச் சவால் விடுக்கக்கூடிய மற்றும் வழக்கத்திற்கு மாறான புதிய பாணி கதைகளுக்கு ஆதரவளிப்பதில் ZEE5 என்றும் உறுதியாக இருக்கிறது. ‘ஆஷா’ திரைப்படம் எங்களது இந்தக் கொள்கையை மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. பொதுவாகப் படம் பார்ப்பவர்கள் என்ன நினைக்க வேண்டும் என்று இயக்குநர் ஓப்பனாகச் சொல்ல மறுப்பதால், படம் முடிந்த பிறகும் மனதில் நீண்ட காலம் நீடிக்கும் ஒரு உன்னதத் திரைப்படமாக இது அமைந்துள்ளது. மிக முக்கியமாகப் பழம்பெரும் மூத்த நடிகை ஊர்வசியின் அசாத்திய நடிப்பு, ஆஷா என்ற விசித்திரக் கதாபாத்திரத்திற்கு ஒரு அசாதாரணமான ஆழத்தை அளிக்கிறது. இத்தகைய உணர்வுப்பூர்வமான தீவிரம் கொண்ட இந்தப் பல பரிமாணத் திரைப்படத்தை இந்தியா முழுவதும் உள்ள ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.












